தமிழ்நாடு
கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற விஜய் வசந்த் எம்.பி.
- தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
- கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
நாட்டின் 77வது சுதந்திர தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி தோவாளை ஊராட்சி ஒன்றியம் சகாயநகர் ஊராட்சி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டார்.
அங்குள்ள பெருந்தலைவர் காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சிறப்புரையாற்றினார். இதையடுத்து தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும் தன்னார்வலர்கள், சமூக சேவகர்களுக்கும் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
வார்டு உறுப்பினர்களும், அரசு அதிகாரிகள், தோட்டக்கலைத்துறை இயக்குநர், வேளாண்மை துறை துணை இயக்குநர், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.