உள்ளூர் செய்திகள்
முக்கூடலில் தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்யும் பணி
- முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் தன்னார்வலர்கள் சிலர் இணைந்து ஆற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
- அப்போது குளிக்க வரும் பொதுமக்கள் ஆற்றுக்குள் விட்டுச் சென்ற கந்தல் துணிகள், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர்.
முக்கூடல்:
முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் தன்னார்வலர்கள் சிலர் இணைந்து ஆற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது குளிக்க வரும் பொதுமக்கள் ஆற்றுக்குள் விட்டுச் சென்ற கந்தல் துணிகள், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர்.
மேலும் ஆற்றின் கரைகள் மற்றும் தண்ணீரில் கிடந்த மது பாட்டில்களையும் அவர்கள் அகற்றினர். இதில் சுமார் 1½ டன் அளவிலான குப்பை கழிவுகள் அகற்றப்பட்டதாக தன்னார்வலர்கள் தெரி வித்தனர். மது பாட்டில்கள் மற்றும் கண்ணாடி துண்டுகளை சமூக விரோதிகள் ஆற்றுக்குள் வீசுவதால் அப்பகுதியில் குளிக்க வரும் பொது மக்க ளுக்கு காயம் ஏற்பட்டு மிகுந்த சிரம த்திற் குள்ளவ தாகவும் அவர்கள் கூறினார். தாமாக முன் வந்து ஆற்றை சுத்தம் செய்த தன்னார் வலர்களை பொதுமக்கள் பாராட்டினர்.