உள்ளூர் செய்திகள் (District)

சாதனை படைத்த தஞ்சை டாக்டர்களுக்கு பரிசு கோப்பையும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

மாநில அளவிலான வினாடி- வினா போட்டியில் தஞ்சை டாக்டர்கள் சாதனை

Published On 2023-01-06 10:12 GMT   |   Update On 2023-01-06 10:12 GMT
  • போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து 40-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
  • தஞ்சை டாக்டர்கள் 2 மற்றும் 3-ம் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.

தஞ்சாவூர்:

கோவையில் அவசர சிகிச்சை பிரிவு முதுநிலை பட்ட மேற்படிப்பு மருத்துவர்களுக்கான மாநில அளவிலான வினாடி- வினா போட்டி இந்திய மருத்துவ சங்கத்தால் நடத்தப்பட்டது.

போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து 20-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளிலிருந்து 40-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் தஞ்சை மீனாட்சி மருத்துவமனையை சேர்ந்த அவசர சிகிச்சை பட்ட மேற்படிப்பு உறைவிட மருத்துவர்கள் டாக்டர்.

சேகர், டாக்டர். குமரேசன், டாக்டர். மீனா மற்றும் டாக்டர். ரூபிக்கா ஆகியோர் கலந்து கொண்டு 2 மற்றும் 3-ம் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.

அவர்களுக்கு இந்திய அவசர சிகிச்சை மருத்துவ சங்க நிர்வாகிகள் பரிசு கோப்பை, சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.

Tags:    

Similar News