உள்ளூர் செய்திகள்

சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.

தஞ்சை அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் சங்க கூட்டம்

Published On 2022-09-25 10:10 GMT   |   Update On 2022-09-25 10:10 GMT
  • குறுவட்ட போட்டிகள், மாவட்ட விளையாட்டு போட்டிகளுக்கு சில பள்ளிகளில் அனுமதி மறுப்பது.
  • உடற்கல்வி ஆசிரியர்களை தலைமை ஆசிரியர்கள் பள்ளி பணியிலிருந்து பணிவிடுப்பு செய்ய ஆணை.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்க செயற்குழு கூட்டம் மேம்பாலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாநில பொருளாளர் முனைவர் தமிழ்செல்வன் தலைமை வகித்தார். மாநில செய்தி தொடர்பாளர் பால்ராஜ், மாநில அமைப்பு செயலாளர் செந்தில்வேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செய்தி தொடர்பாளர் சந்துரு வரவேற்றார்.

மூத்த சங்க நிர்வாகிகள் நவநீதகிருஷ்ணன், ரவிச்சந்திரன், கல்வி மாவட்ட நிர்வாகிகள் கோவிந்தராஜ், சுரேஷ்குமார், விஜயராகவன், கென்னடி, ரங்கநாதன், ஸ்ரீதர், வெங்கடஜலபதி, மகளிரணி செயலாளர்கள் லதா, வகிதா பானு, சாவித்ரி, கண்மணி, திலகவதி ஆகியோரின் ஆலோசனையின் பேரில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

உடற்கல்வி தேர்வு மற்ற பாடங்களின் தேர்வு கால அட்டவணையில் இணைத்து அனுப்ப வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் தெரிவிப்பது, பொது நிதியிலிருந்து இணை இயக்குநரின் செயல்முறையின்படி விளையாட்டு உபகரணம், விளையாட்டு போட்டிக்கு செல்லும் மாணவர்களுக்கு உணவு படி, பயண படி வழங்க மறுக்கும் தலைமையாசிரியர்களிடம் நிதி பெறுவது சார்ந்து முதன்மை கல்வி அலுவலரிடம் முறையிட்டு நிதி பெறுவது, பாடகுறிப்பேடு எழுதுவதற்கு ஏதுவாக உடற்கல்விக்கு பாடபுத்தகம் மற்றும் சிலபஸ் வழங்குமாறு பள்ளி கல்வி ஆணையாருக்கு கடிதம் அனுப்புதல், குறுவட்ட போட்டிகள், மாவட்ட விளையாட்டு போட்டிகளுக்கு சில பள்ளிகளில் அனுமதி மறுப்பது சார்ந்து முதன்மை கல்வி அலுவலரிடம் பேசி தீர்வு காண்பது, உலக திறனாய்வு தேர்வு எடுக்க மற்ற பள்ளிகளுக்கு நியமிக்கபடும் உடற்கல்வி ஆசிரியர்களை தலைமை ஆசிரியர்கள் பள்ளி பணியிலிருந்து பணிவிடுப்பு செய்ய ஆணை வழங்கும்படி கோருவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் வெங்கடாஜலபதி நன்றி கூறினார்.

Tags:    

Similar News