தஞ்சையில் மாநகராட்சி , நகராட்சி ஓய்வூதியர்கள் சங்கம் மாநில பொதுக்குழு கூட்டம்
- மூத்த குடிமக்களுக்கு ரெயிலில் சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டும் என்பது உளன்ளிட்ட 16 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- மாநில சங்க பொருளாளர் வெங்கடாச்சலம் நிதிநிலை அறிக்கை படித்தார்
தஞ்சாவூர்:
தஞ்சை சண்முகா நகரில் இன்று தஞ்சை மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்கம் மாநில பொதுக்குழு கூட்டம் மற்றும் மாநகர கிளை சங்க 29-ம் ஆண்டு விழா நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் கோபால் தலைமை தாங்கினார். மாநில துணை பொது செயலாளரும் கிளை தலைவருமான கந்தசாமி வரவேற்றார். மதுரை மண்டல தலைவர் விவேகானந்தன் நிர்வாக அறிக்கை வாசித்தார்.
மாநில சங்க பொருளாளர் வெங்கடாச்சலம் நிதிநிலை அறிக்கை படித்தார். இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், ஆணையர் சரவணக்குமார், மாநகராட்சி உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி இயக்குனர் தனபாண்டியன், தமிழ்நாடு அனைத்து மாநகராட்சி அலுவலர்கள் சங்கம் கூட்டமைப்பு மாநில செயலாளர் கண்ணதாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி னர்.இந்த கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியர் மறைவிற்கு பின்னர் வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு தொகையை ரூ.1 லட்சமாக உயர்த்த வேண்டும். மூத்த குடிமக்களுக்கு ரெயிலில் சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டும் என்பது உளன்ளிட்ட 16 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாநகராட்சி கிளை துணை செயலாளர் கருப்பையா நன்றி கூறினார்.