உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் மாநில தலைவர் விசுவநாதன் பேசினார்.

தஞ்சையில், தமிழக ஏரி, ஆற்று பாசன விவசாயிகள் சங்க கூட்டம்

Published On 2023-04-13 10:24 GMT   |   Update On 2023-04-13 10:24 GMT
  • பாசன நீர் வழங்கும் ஏரிகளை போர்க்கால அடிப்படையில் புனரமைக்க வேண்டும்.
  • விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும்.

தஞ்சாவூர்:

தஞ்சையில் இன்று தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்க மாவட்ட கூட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் விசுவநாதன் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார்.

திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் முடிகொண்டான் ராஜா, மாநில செயலாளர் உலகநாதன், நிர்வாகிகள் அரவிந்தசாமி, வில்லு ஜெகதீஷ், பவுன்ராஜ், ஜெயபால், விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில், காவிரி, கல்லணை, வெண்ணாறு ஆகியவைகளின் பாசன வாய்க்கால், இதனுடைய பாசன நீர் வழங்க கூடிய ஏரிகள் போர்க்கால அடிப்படையில் புனரமைக்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் முந்திரி, பலா, சின்ன வெங்காயம், துவரை போன்ற பயிர்கள் மற்றும் கடலை, எள், ஆமணக்கு, சூரியகாந்தி போன்ற எண்ணெய் வித்துக்களை பயிர் செய்ய விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும்.

தஞ்சை மாவட்டத்தில் 2021-2022 மற்றும் 2022-23 -ம் ஆண்டில் நெல், உளுந்துக்கு காப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும்.

அரியலூர் மாவட்டம் தூத்தூர், தஞ்சை மாவட்டம் வாழ்க்கை இடையே கொள்ளிடத்தின் குறுக்கே கதவுடன் கூடிய அணை கட்ட நிதி ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில் பூதலூர் ஒன்றிய அமைப்பாளர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

Tags:    

Similar News