உள்ளூர் செய்திகள்

மேட்டுப்பாளையத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

Published On 2022-11-08 10:20 GMT   |   Update On 2022-11-08 10:20 GMT
  • டாஸ்மாக் ஊழியர் மீதான கொலை வெறி தாக்குதலை கண்டிப்பது என என பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
  • டாஸ்மாக் விற்பனை பணத்தை வங்கிகளே நேரடியாக பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேட்டுப்பாளையம்,

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் விஜய் ஆனந்த் (வயது 46). இவர் சிறுமுகைலிருந்து அன்னூர் செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி விஜய்ஆனந்த் டாஸ்மாக் கடையில் வசூலான ரூ.10 லட்சம் பணத்தை மேட்டுப்பாளையத்தில் உள்ள வங்கியில் செலுத்துவதற்காக சென்றார். அப்போது இவரை பின்தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் பட்டா கத்தியை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளை அடிக்க முயற்சி செய்தனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து கோவை மாவட்ட டாஸ்மாக் கூட்டுக்குழு சார்பில் இன்று சிறுமுகை தியேட்டர் மேடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவை மாவட்ட டாஸ்மாக் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஜான் தலைமை தாங்கினார். ஏ.ஐ.சி.சி.டி.யு மாநில துணைத்தலைவர் மதியழகன் முன்னிலை வகித்தார். டாஸ்மாக் விற்பனை பணத்தை வங்கிகளே நேரடியாக பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர் மீதான கொலை வெறி தாக்குதலை கண்டிப்பது என என பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் காரமடை, சிறுமுகை, மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றி வரும் டாஸ்மாக் ஊழியர்கள் கோவை மாவட்ட தலைவர் பத்மநாபன், சுதாகர், வாசுதேவன், தினேஷ், மூர்த்தி, சரவணன், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News