பாரத் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியர் தின விழா
- வாழ்த்து அட்டை, பூங்கொத்து மற்றும் நினைவு பரிசு வழங்கி பேசினார்.
- விழாவின் முடிவில் முதல்வர் விஜயகுமார் நன்றி கூறினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி யில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கிருஷ்ணவேணி மணி குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
பள்ளியின் நிறுவனர் மணி தலைமை தாங்கி, அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்து அட்டை, பூங்கொத்து மற்றும் நினைவு பரிசு வழங்கி பேசினார்.
அவர் பேசும் போது டாக்டர் ராதாகிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு குறித்தும், அவர் ஆசிரியராக தனது பணியை தொடங்கி உழைப்பால் எவ்வாறு குடியரசு தலைவராக உயர்ந்தார் என விளக்கி பேசினார். அதே போல எதிர்கால சமுதாயத்திற்கு ஆசிரியர்கள் செய்ய வேண்டிய சேவை குறித்து விளக்கி பேசினார்.
தொடர்ந்து ஆசிரியர்க ளுக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். இதில் மூர்த்தி முதல் பரிசும், அருண்பிரசாத் 2-ம் பரிசும், செல்வராஜ் 3-ம் பரிசும் பெற்றனர்.
ஆசிரியைகளுக்கான விளையாட்டு போட்டியில் சிந்து முதல் பரிசும், நசீமா பேகம் 2-ம் பரிசும், அம்ரீன் 3-ம் பரிசும் பெற்றனர்.
இந்த விழாவில் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் சந்தோஷ் ஆசிரி யர்களை பாராட்டி சிறப்புரையாற்றினார். விழாவின் முடிவில் முதல்வர் விஜயகுமார் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை துணை முதல்வர் நசீர் பாஷா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர்.