உள்ளூர் செய்திகள்

கடலூர் மஞ்சகுப்பம் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் சேர்ப்பதற்காக மாணவிகளின் உடமைகளை பெற்றோர்கள் எடுத்து வருவதை படத்தில் காணலாம்.

கடலூர் மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு மாணவர்களை ரோஜா பூ -பன்னீர் தெளித்து வரவேற்ற ஆசிரியர்கள்

Published On 2023-06-12 08:20 GMT   |   Update On 2023-06-12 08:20 GMT
  • மாணவர்களும் பெற்றோர்களும் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தந்ததோடு மாண வர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
  • காலை 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவ - மாணவிகள் பள்ளி சீருடையில் மகிழ்ச்சியாக பள்ளிகளுக்கு வந்தனர்.

கடலூர்:

தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் ஏப்ரல் மற்றும் மே மாதம் வரை முழு ஆண்டு மற்றும் பொதுத் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறையில் இருந்து வந்தனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை மற்றும் அனல் காற்று வீசியதால் பொது மக்கள் அனைவரும் பெரும் பாதிப்படைந்து வந்தனர். இதனை தொடர்ந்து கடந்த ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் மாணவர்கள் நலன் கருதி 6-ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை இன்று 12 -ந் தேதியும் மற்றும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை நாளை மறுநாள் 14-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதனை தொடர்ந்து மாணவர்களும் பெற்றோர்க ளும் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தந்ததோடு மாண வர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் கூடுதலாக விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் 6-ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. இதில் கடலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளிகள் என 2200-க்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருகின்றது. இதில் இன்று 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 800-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனை தொடர்ந்து இன்று பள்ளிகள் திறந்ததை முன்னிட்டு கடந்த சில தினங்களாக பள்ளி வளாகங்கள் மற்றும் கழிவறைகள் சுத்தம் செய்யும் பணி, வர்ணம் பூசும்பணிகள், வகுப்பறைகளில் டேபிள்கள் வைக்கும் பணி மற்றும் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து பாதுகாப்பான குடிநீர் வழங்கும் நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக மேற்கொண்டு வந்தனர். 

இன்று காலை 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவ - மாணவிகள் பள்ளி சீருடையில் மகிழ்ச்சியாக பள்ளிகளுக்கு வந்தனர். பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாள் என்பதால் காலை முதல் முக்கிய சாலைகளில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் பாதுகாப்பாக பள்ளிக்கு அழைத்து வந்து விட்டு சென்றதை காண முடிந்தது. அப்போது ஒரு சில மாணவ, மாணவிகள் பள்ளியில் விட்டுச்சென்ற தனது பெற்றோர்களிடமிருந்து பள்ளிக்கு செல்லாமல் அழுததையும் காண முடிந்தது. பள்ளிகளில் செயல்படும் விடுதிகளில் மாணவர்கள் தங்கி படிக்கும் விதமாக இரும்பு பெட்டிகள் மற்றும் தங்களுக்கு தேவையான உடைமைகளை பெற்றோர்களுடன் எடுத்து வந்ததையும் காண முடிந்தது. முன்னதாக பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களை அன்புடன் வரவேற்று பள்ளி வகுப்பறைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவிகளுக்கு ரோஜா பூ மற்றும் பன்னீர் தெளித்து ஆசிரியர்கள் அன்புடன் வரவேற்றனர். காலை முதல் அதிக அளவில் வாகன போக்குவரத்து இருந்த காரணத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்த நிலையில் போலீசார் போக்குவரத்து சரி செய்தனர். 

இதேபோல் விருத்தாசலம் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு மாணவர்கள் மகிழ்ச்சியாக பள்ளிக்கு சென்றனர். இதில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு தலைமை யாசிரியர் செல்வகுமாரி , உதவி தலைமைஆசிரியர் கலைவாணி உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் பூங்கொத்து மற்றும் சாக்லேட்டுகள் கொடுத்து மாணவிகளை வரவேற்றனர். மேலும் தமிழக அரசின் உத்தரவின்பேரில் பள்ளிகள் திறந்த முதல் நாளான இன்று பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

இதேபோல் பண்ருட்டி யிலும் உள்ள அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறைக்கு பின் இன்று 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. முதல் நாளில் பாடப்புத்த கங்கள், நோட்டுகள் உள்பட இலவச கல்வி உபகரணங்கள் வழங்குவதற்கான ஏற்பாடு கள் தீவிரமாக நடந்து வரு கிறது.இதனைமுன்னிட்டு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின்பேரில் பள்ளிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ள பட்டது.

Tags:    

Similar News