விவசாயிகளுக்கு சொட்டுநீர், உரபாசனம் குறித்த தொழில்நுட்ப பயிற்சி
- அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிற்சி மாவட்ட அளவில் நடைபெற்றது.
- சொட்டு நீர் பாசனத்தில் டிஸ்க், வடிகட்டி, மெயின், சப் மெயின் பைப்புகள், பக்கவாட்டு குழாய்கள், சுத்தம் செய்யும் முறைகள் மற்றும் அமில சிகிச்சை பற்றியும் நீர் வழி உரபாசனம் குறித்தும் விளக்கம் அளித்தார்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ராமநாய்க்கன்பாளையம் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிற்சி மாவட்ட அளவில் நடைபெற்றது.
அட்மா திட்ட தலைவர் டாக்டர் செழியன் தலைமை வகித்தார்.வேளாண்மை உதவி இயக்குனர் ஜானகி (பொறுப்பு) முன்னிலை வகித்தார். மேலும் வேளாண்மை அலுவலர் கவுதமன் வேளாண்மை - உழவர் நலத்துறை மூலம் செயல்படும் திட்டங்கள் மானியங்கள் குறித்து விளக்கமளித்தார்.
சொட்டு நீர் பாசன நிறுவனத்தை சேர்ந்த சுந்தரேசன் சொட்டு நீர் பாசனத்தில் டிஸ்க், . வடிகட்டி, மெயின், சப் மெயின் பைப்புகள், பக்கவாட்டு குழாய்கள், சுத்தம் செய்யும் முறைகள் மற்றும் அமில சிகிச்சை பற்றியும் நீர் வழி உரபாசனம் குறித்தும் விளக்கம் அளித்தார்.
வட்டார தொழில்நுட்ப மேலாளா் சுமித்ரா, உதவி தொழில்நுட்ப மேலாளர் தமிழ்ச்செல்வி, திலகவதி மற்றும் பாலு, செல்வம், முன்னோடி விவசாயி ஆகியோர் கலந்து கொண்டனர். பயிற்சியின் முடிவில் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை, உணவு வழங்கப்பட்டது.