- கோமங்கலத்தில் தங்கி ராகேஷ் கான் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
- போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ராகேஷ் கானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை,
மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் ராகேஷ் கான் (வயது 25). இவரது மனைவி மனோகர கான் (22). இவர்களுக்கு மகன் உள்ளார்.
இந்த நிலையில் இவர்கள் குடும்பத்துடன் கோவை வந்தனர். பின்னர் பொள்ளாச்சியை அடுத்த கோமங்கலத்தில் தங்கி ராகேஷ் கான் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று ராகேஷ் கான் தனது மகனை கண்டித்து தாக்கினார்.
இதனை பார்த்த அவரது மனைவி மனோகர கான், அவரை கண்டித்தார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதனால் ராகேஷ் கான் மனவேதனையுடன் இருந்து வந்தார்.
சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்கி அடைந்த அவர் வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி கதறி அழுதார்.
இதுகுறித்து கோமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ராகேஷ் கானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.