உள்ளூர் செய்திகள்
- குடோனில் கடலை மூட்டையை இறக்கிவிட்டு பஸ் நிலையம் அருகில் கடலை கடைக்கு பணம் வாங்க வந்துள்ளார்.
- சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
நன்னிலம்:
கும்பகோணம் ஒட்டன் செட்டி தெருவை சேர்ந்தவர் சிவசங்கர் (வயது 35). இவர் கடலை கடையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் உள்ள குடோனில் கடலை மூட்டையை இறக்கிவிட்டு நன்னிலம் பேருந்து நிலையம் அருகில் கடலைக் கடைக்கு பணம் வாங்க வந்துள்ளார்.
அப்போது சரக்குவாகனத்தின் கதவை திறந்து இறங்கும் போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து சிவசங்கரன் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து நன்னிலம் போலீசார் அரசு பேருந்து ஓட்டுனர் சரவணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.