உவரி சுயம்புலிங்கசுவாமி கோவிலில் தெப்பத் திருவிழா
- உவரி சுயம்புலிங்கசுவாமி கோவிலில் தைப்பூச தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடந்தது.
- அதைத்தொடர்ந்து சுவாமிகள் தெப்பத்தை 11 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
திசையன்விளை:
உவரி சுயம்புலிங்கசுவாமி கோவிலில் தைப்பூச தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடந்தது.
9-ம் திருவிழாவான நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. நேற்று காலை பஞ்சமூர்த்தி சுவாமிகள் ஊர்வலம் ரதவீதிகளில் நடந்தது. நேற்று இரவு தெப்ப திருவிழா நடந்தது.
விழாவை முன்னிட்டு சுவாமி சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி தெப்பத்திற்கு புறப்பட்டனர்.
அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அலங்கார சப்பரத்தில் சுவாமிகள் எழுந்தருளினர். அங்கு சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து சுவாமிகள் தெப்பத்தை 11 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
இதில் திரளானவர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் செய்திருந்தார்.