உள்ளூர் செய்திகள்

அடவிநயினார் அணை பகுதியில் பயங்கர காட்டுத்தீ- 2 நாள் போராட்டத்திற்கு பின் கட்டுக்குள் வந்தது

Published On 2023-03-05 08:46 GMT   |   Update On 2023-03-05 08:46 GMT
  • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது.
  • 2-வது நாளாக இன்றும் காட்டுத்தீ பற்றி எரிந்தது.

நெல்லை:

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே மேக்கரையில் அடவிநயினார் அணை உள்ளது. மொத்தம் 132 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையானது மாவட்டத்தின் மிகப்பெரிய அணையாகும்.

இந்த அணையின் நீர்பிடிப்பை ஒட்டிய பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. காற்றின் வேகத்தின் காரணமாக தீ முழுவதும் வேகமாக பரவியது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்க போராடினர்.

எனினும் காற்றின் வேகம் காரணமாக தீ அதிக வேகமாக பரவி வந்தது. இதையடுத்து 2-வது நாளாக இன்றும் காட்டுத்தீ பற்றி எரிந்தது. அதனை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

Tags:    

Similar News