அம்பை வாகைக்குளம் வாகைபதியில் தைப்பெருந்திருவிழா
- அம்பை அருகே உள்ள வாகைக்குளம் வாகை பதியில் தைப்பெருந் திருவிழா நடைபெற்றது.
- 8-ம் திருநாளன்று காலை 11 மணிக்கு வாகைபதி பால் கிணற்றில் இருந்து பால் குடம் எடுத்தல், அன்னதர்ம நிகழ்ச்சிகள் நடந்தது.
கல்லிடைக்குறிச்சி:
அம்பை அருகே உள்ள வாகைக்குளம் வாகை பதியில் தைப்பெருந் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் கருடன், தண்டிகை, சிங்கம், அன்னம், சூரியன், நாகம்,பூ பல்லக்கு, குதிரை, அனுமன், இந்திரன், ரிஷபம் ஆகிய வாகனங்களில் சப்பர பவனியும், தொடர்ந்து 11 நாட்களும் தினமும் மதியம் உச்சிப்படிப்பு மற்றும் உச்சிப்பால் தர்மம், அன்னதர்மம் ஆகியன நடைபெற்றது.
8-ம் திருநாளன்று காலை 11 மணிக்கு வாகைபதி பால் கிணற்றில் இருந்து பால் குடம் எடுத்தல், அன்னதர்ம நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு அய்யா ஆதிநாராயண வைகுண்டர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கலி வேட்டையாடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 10-ம் திருநாளன்று காலை 11 மணிக்கு வாகைபதி பால் கிணற்றில் இருந்து கிணற்று பால் குடம் மற்றும் ஆண்கள் மற்றும் பெண்கள் சந்தனக்குடம் எடுத்தல், கும்பிட்டு நமஸ்கார நிகழ்ச்சி நடைபெற்றது.
அய்யா ஆதிநாராயண வைகுண்டர் இந்திரன் வாகனத்தில் பவனி வருதல் நடைபெற்றது. திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சியாக 11-ம் திருநாள், 25வது ஆண்டு தேர் திருநாள், 50-வது தேர் பவனி மாலை 4 மணிக்கு செண்டை மேளம், நையாண்டி மேளங்கள் முழங்க திருத்தேரோட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஏராளமான அன்பு கொடிமக்களும், வாகைபதி அன்பர்களும் அய்யா வழி அன்புக்கொடி மக்களும் கலந்து கொண்டனர். இரவு காளை வாகனத்தில் அய்யா பவனி வந்து கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவுபெற்றது.