தஞ்சை மாநகர தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்
- தஞ்சை மாநகரில் 51 வட்டங்களிலும் வாக்குசாவடி முகவர்கள் நியமிப்பது.
- முன்னோடிகளின் தலைமையில் கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் இன்று மத்திய மாவட்ட மாநகர தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகர அவை தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநகர செயலாளரும் மேயருமான சண்.ராமநாதன் வரவேற்றார்.
மத்திய மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ, மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் கணேசன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் உபயதுல்லா, டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்த கூட்டத்தில் மீண்டும் தி.மு.க. தலைவராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நவம்பர் 1-ந் தேதி மாநகர சபை கூட்டம் நடத்துவதற்கும் மற்றும் உள்ளாட்சி தினமாக அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கபட்டது.
நவம்பர் 27-ந் தேதி உதயநிதிஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை மாநகரம் 51 வட்டங்களிலும் நிர்வாகிகளை கொண்டு முன்னோடிகளின் தலைமையில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். தஞ்சை மாநகரம் 51 வட்டங்களிலும் வாக்குசாவடி முகவர்கள் நியமிப்பது, உதயநிதிஸ்டாலின் எம்.எல்.ஏ. அறிவுறுத்தல்படி இல்லம் தேடி இளைஞரணி உறுப்பினர்களை சேர்த்து தஞ்சை மாநகரம் முன்மாதிரியாக செயல்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாநில மகளிர் தொண்டரணி அமைப்பாளர் காரல்மார்க்ஸ், மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் ஜித்து, மாநில பிரசார குழு உறுப்பினர் கார்குழலி, முன்னாள் எம்.பி. பரசுராமன், மாவட்ட அவை தலைவர் இறைவன், மாவட்ட துணை செயலாளர்கள் மணிமாறன், கனகவள்ளி பாலாஜி, மாவட்ட பொருளாளர் அண்ணா, பொதுக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், புண்ணியமூர்த்தி, தர்மராசன், மாநகர நிர்வாகிகள் துணை செயலாளர்கள் எழில், உஷா, காளையார் சரவணன், பகுதி செயலாளர்கள் சந்திரசேகர மேத்தா, சதாசிவம், கார்த்திகேயன், நீலகண்டன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, மாவட்ட அணி அமைப்பாளர்கள் சண்முகசுந்தரம், கமலாரவி, செந்தமிழ்செல்வன், மண்டல குழு தலைவர்கள் ரம்யாசரவணன், கலையரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில்மாநகர துணை செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.