வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணிநியமன ஆணை
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
- இம்முகாமில் 714 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் கே.எஸ்.கே.பொறியியலில் மற்றும் தொழில்நுட்பம் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரகவாழ்வாதார இயக்கம் இணைந்து தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தியது.
இந்த முகாமில் பங்கேற்று தேர்வு பெற்றவர்களுக்கு பணிநியமன ஆணைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர்சி.வி.கணேசன் ஆகியோர் அரசு தலைமை கொறடாகோவி.செழியன், மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எம்.பி.க்கள் எஸ்.கல்யாணசுந்தரம், ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் வழங்கினர். பின்னர் அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் கும்பகோணம் கே. எஸ். கே. பொறியியலில் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது .
முகாமில் சென்னை, திருப்பூர், கோவை, தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் உள்ளிட்ட ஊர்களிலிருந்து வந்த தனியார் முன்னணி நிறுவனங்கள் உட்பட 130-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் ஆகியவை கலந்தகொண்டன.
இம்முகாமில் 18 வயது முதல் 40 வரை உள்ள 5 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள், நர்சிங் மற்றும் பி.இ படித்த இளைஞர்கள், இளம் பெண்கள் என 4300-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டதில், 714 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. 416 நபர்கள் இரண்டாம் கட்ட தேர்விற்கும், 64 நபர்கள் திறன் பயிற்சிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
இம்முகாமில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபத்ரா, எம்.எல்.ஏ.க்கள்அன்பழகன், துரைசந்திரசேகரன், கும்பகோணம் மாநகராட்சி மேயர்சரவணன், துணை மேயர்தமிழழகன், மாநகராட்சிஆணையர்செந்தில்முருகன், கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர்லதா ,மண்டல இணை இயக்குனர்சந்திரன், உதவி இயக்குநர் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம்) வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்) ரமேஷ்குமார், ஒன்றியக் குழுத் தலைவர்காயத்ரி அசோக்குமார், கே.எஸ்.கே. பொறியியல் கல்லூரி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் உதவி திட்ட அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவர்கள் கலந்துகொண்டனர்.