- ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான “எண்ணும் எழுத்தும்” ஐந்துநாள் பயிற்சியின் தொடக்க நிகழ்ச்சி, பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
- பயிற்சியில் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் பாடங்களில் கற்றலை எளிமைப்படுத்துவதற்காக பாடல், கதை, படைப்பாற்றல், எழுதுதல் போன்றவை செயல்பாட்டு வடிவங்களுடன் ஆசிரியர்களுக்கு கற்பிக்கப்பட்டது.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டார வள மையத்தின் சார்பில், தொடக்க நிலையில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான "எண்ணும் எழுத்தும்" ஐந்துநாள் பயிற்சியின் தொடக்க நிகழ்ச்சி, பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
பயிற்சியை வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) முருகேசன் தொடங்கி வைத்து பயிற்சியின் நோக்கம் பற்றி எடுத்துக் கூறினார்.
பயிற்சியில் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் பாடங்களில் கற்றலை எளிமைப்படுத்துவதற்காக பாடல், கதை, படைப்பாற்றல், எழுதுதல் போன்றவை செயல்பாட்டு வடிவங்களுடன் ஆசிரியர்களுக்கு கற்பிக்கப்பட்டது.
அரசு மகளிர் மேல்நி லைப்பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி,வட்டார கல்வி அலுவலர் அங்கைய ற்கண்ணி, சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் இளையராணி, மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் முனைவர் ஜெயராஜ் பயிற்சியினை பார்வையிட்டனர். இப்பயிற்சி 109 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.