உள்ளூர் செய்திகள்

ரூ.3.60 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் வழங்கினார்

Published On 2022-06-07 10:27 GMT   |   Update On 2022-06-07 10:27 GMT
  • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 341 மனுக்கள் பெறப்பட்டது.
  • ‘பசுமை முதன்மையாளர் விருது” மற்றும் தலா ரூ. 1 லட்சம் வீதம் ரூ. 3 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பேசியதாவது:-

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 341 மனுக்கள் பெறப்பட்டது.

பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்டஅலுவல ர்களுக்கு அறிவுறுத்த ப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.பின்னர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் சுற்றுச்சூழல் மூலம் பல்வேறு ஆக்க பணிகளை மேற்கொண்டு விழிப்புணர்வினை ஏற்படுத்திய லிட்டில் ஸ்காலர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவி யாழினி, கவின்மிகு தஞ்சை இயக்கம் மற்றும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு 'பசுமை முதன்மையாளர் விருது" மற்றும் தலா ரூ. 1 லட்சம் வீதம் ரூ. 3 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்.

இதையடுத்து தன்வி ருப்ப நிதியின் மூலம் அஜய் குடும்பத்தாருக்கு கல்லூரி கட்டணம் செலுத்துவதற்கான ரூ. 20000 மதிப்பிலான காசோலையும், சுகந்தி குடும்பத்தாருக்கு ரூ. 40000 மதிப்பிலான காசோலையும் வழங்கினார். மொத்தம் ரூ.3.60 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது.

இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா , தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News