உள்ளூர் செய்திகள்

அன்னூர் அருகே பூசாரி வீட்டில் பூத்து குலுங்கிய பிரம்மகமலம் மலர்

Published On 2023-09-27 08:18 GMT   |   Update On 2023-09-27 08:18 GMT
  • பிரம்மகமலம் மலர் மலரும்போது அருகி இருந்து நாம் நினைத்து வேண்டினால் அது வரமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.
  • ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்

மேட்டுப்பாளையம்,

உத்தரகண்ட் மாநில மலராகவும், இமயமலை பகுதிகளில் மட்டுமே காணப்படும் அதிசய மலராகவும் உள்ளது பிரம்ம கமலம்.

இளவேனில் காலத்தில் மாலை 7 மணிக்கு மேல் இரவு நேரத்தில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும். இந்த பூ மலரத் தொடங்கிய நேரத்திலிருந்து 2 மணி நேரத்துக்கு பிறகே முழுமையாக மலரும்.

அதிகாலைக்குள் உதிா்ந்து விடும். என்றாலும் இந்த பூவின் வாசம் அந்த பகுதி முழுவதும் வீசும். இந்த மலரின் செடி கள்ளிச்செடி வகையைச்சோ்ந்தது என கூறப்படுகிறது.

உலக வெப்பநிலை மாறுபாட்டால் அழிந்துவரும் இந்த தாவரத்தை பாதுகாக்க உத்தரகாண்ட் மாநில அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த மலா் மலரும்போது அருகி இருந்து நாம் நினைத்து வேண்டினால் அது வரமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இத்தகைய அபூா்வ பிரம்ம கமலம் பூ அன்னூர் அருகே பொகலூர் பகுதியை சேர்ந்த பூசாரியான முத்துச்சாமி என்பவரின் வீட்டில் 3 ஆண்டுகளாக வளா்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த செடியில் 1 மொட்டு சில தினங்களுக்கு முன்னா் வந்துள்ளது.

இதனிடையே நேற்று காலை முதல் மொட்டு மலர தொடங்கிய நிலையில் நள்ளிரவு பிரம்ம கமலம் மலா் வெண்ணிலவை போல் காட்சியளித்தது. இதையறிந்த பொதுமக்கள் பலா் ஆச்சரியத்துடன் பாா்த்து வரம் கேட்டு வேண்டியதோடு சுயபடம் எடுத்துக்கொண்டு உறவினா்களுக்கும் அனுப்பி மகிழ்ந்தனா்.

Tags:    

Similar News