விபத்து வழக்கில் தம்பிக்கு பதில் ஆள்மாறாட்டம் செய்து கோர்டில் ஆஜரான அண்ணன் கைது
- அவரது அண்ணன் குணசேகரன் என்பவர் ஆள்மாறாட்டம் செய்து ஆஜராகி வந்துள்ளார்.
- அசோக் வெளிநாடு சென்றுள்ளதும் அவருக்கு பதிலாக அண்ணன் குணசேகரன் ஆஜரானதும் தெரிய வந்தது.
சீர்காழி:
சீர்காழி அருகே திருமுல்லை வாசல் பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.
இந்த விபத்தில் மோட்டார்சைக்கி ளில் எதிரே வந்தவர் இறந்து விட்டார்.
இது தொடர்பாக சீர்காழி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக வழுதலைக்குடி பகுதியைச் சேர்ந்த அசோக் என்பவர் சீர்காழி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். ஆனால் அவருக்கு பதிலாக அவரது அண்ணன் குணசேகரன் (வயது 43) என்பவர் ஆள்மாறாட்டம் செய்து ஆஜராகி வந்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் வந்ததின் அடிப்படையில் ஆள் மாறாட்டம் செய்த நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் வழுதலைக்குடி பகுதியை சேர்ந்த அசோக் வெளிநாடு சென்றுள்ளதும் அவருக்கு பதிலாக அண்ணன் குணசேகரன் நீதிமன்றத்தில் ஆஜரானதும் உண்மை என தெரிய வந்தது.
அதனை அடுத்து அண்ணன் குணசேகரனை கைது செய்து அதற்கு துணை போன வக்கீல் குமாஸ்தா திருஞானம் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.