உள்ளூர் செய்திகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பதக்கம் பெற்ற வீரர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றபோது எடுத்த படம். அருகில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ராஜா எம்.எல்.ஏ. ஆகியோர் உள்ளனர்.

காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் பதக்கம் பெற்ற வீரர்கள் முதல்-அமைச்சரிடம் வாழ்த்து

Published On 2023-01-11 08:31 GMT   |   Update On 2023-01-11 08:31 GMT
  • நியூசிலாந்து நாட்டின் தலைநகர் ஆக்லாந்து நகரில் நடைபெற்ற காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் கலந்து கொண்டு பல்வேறு பதக்கங்களை பெற்று நாடு திரும்பினர்.
  • காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதாக உறுதி அளிக்கப்பட்டது.

சங்கரன்கோவில்:

தமிழ்நாடு வலுதூக்கும் சங்கத்தை சேர்ந்த 13 வீரர், வீராங்கனைகள் கடந்த நவம்பர் 28-ந் தேதி முதல் டிசம்பர் 6-ந் தேதி வரை நியூசிலாந்து நாட்டின் தலைநகர் ஆக்லாந்து நகரில் நடைபெற்ற காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் கலந்து கொண்டு பல்வேறு பதக்கங்களை பெற்று நாடு திரும்பினர்.

அவர்கள் அனைவரையும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தமிழ்நாடு வலுதூக்கும் சங்கத்தின் தலைவர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் அண்ணா அறிவாலயம் வரவழைத்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

மேலும் காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதாக உறுதி அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் போது மாநில வலுதூக்கும் சங்கத் தலைவர் ராஜா எம்.எல்.ஏ., பொதுச் செயலாளர் நாகராஜன், இணைத் தலைவர் ஹரிதாஸ், செயலாளர் லோகநாதன் மற்றும் வீரர், வீராங்கனைகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர்களுக்கு நன்றியை தெரிவித்தனர்.

Tags:    

Similar News