கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இலவச மனைபட்டா கேட்டு பெண்கள் திரண்டு வந்ததால் பரபரப்பு
- கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் இன்று காலை முதல் நேரில் வந்து தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து செல்கின்றனர்.
- இலங்கையனூர் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பம் வசித்து வருகின்றனர்
,கடலூர்:
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் இன்று காலை முதல் நேரில் வந்து தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து செல்கின்றனர். இந்த நிலையில் இன்று காலை சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது-
கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இலங்கையனூர் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பம் வசித்து வருகின்றனர். எங்கள் கிராமத்தில் 35 ஆண்டுகளாக வீடு இல்லாமல் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசித்து வருகின்றோம். இது தொடர்பாக கிராம பொதுமக்கள் இலவச மனை பட்டா கேட்டு பலமுறை மனு அளித்து உள்ள நிலையில் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால் எங்கள் கிராமத்தில் மக்களுக்கு இலவச மனை பட்டா வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.