உள்ளூர் செய்திகள்

வனத்துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

கள்ள துப்பாக்கி வைத்திருப்போர் உடனடியாக ஒப்படைக்க வனத்துறையினர் வேண்டுகோள்

Published On 2022-07-18 09:57 GMT   |   Update On 2022-07-18 09:57 GMT
  • ஒரு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் உடனடியாக வனத்துறை வழங்கும் என தெரிவித்தனர்.
  • காவல் நிலையத்திலோ ஒப்படைக்கும்படி வனத்துறையினர் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பென்னாகரம்,

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த தாசம்பட்டி மாரியம்மன் கோயில் அலுவலக வளாகத்தில். வனத்துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இதில் வனத்துறை சார்பில் பொதுமக்களுக்கு வனத்தை விட்டு வெளியே வரும் . யானை காட்டுப்பன்றி முயல் மான் மயில் உள்ளிட்டவைகள் விவசாய நிலத்தில் புகுந்து சேதம் ஏற்பட்டால் ஒரு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் உடனடியாக வனத்துறை வழங்கும் என தெரிவித்தனர்.

மேலும் வட்ட வணஅள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமங்கள் தாசம்பட்டி, பவளந்தூர், எ.கோடுபட்டி, பி.கோடுபட்டி, சக்கல்நத்தம், ஜெல்மாரம்பட்டி, அட்டப் பள்ளம், உப்பலாபுரம், மருக்காரம்பட்டி, காந்தி நகர், எலும்மல்மந்தை, நாவணம்பட்டி, கொடிக் கம்பம், குழிப்பட்டி, தும்பல் கொள்ளை, உள்ளிட்ட கிராமங்களில் கள்ளத் துப்பாக்கி வைத்திருப்போர் அவர்களாக முன்வந்து ஒரு பொது இடத்திலோ அல்லது வனத்துறையிலே அல்லது காவல் நிலையத்திலோ ஒப்படைக்கும்படி வனத்துறையினர் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

வனத்தையோ வனத்தில் இருக்கும் உயிரினங்களையும் பாதுகாப்பது நமது கடமை என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் வனசரக அலுவலர் நடராஜன், வனகாப்பளார் அருண்குமார், வனவர் முனுசாமி, மற்றும் ஊர் பொதுமக்கள் பெருந்திரளா னோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News