உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் அட்டகாசத்தில் ஈடுபட்ட மற்றொரு கரடியை பிடிக்க வனத்துறை தீவிரம்

Published On 2022-07-23 09:47 GMT   |   Update On 2022-07-23 09:47 GMT
  • உயிலட்டி, குன்னியட்டி பகுதிகளில் 3 கரடிகள் சுற்றி திரிந்து மக்களை அச்சுறுத்தி வந்தது.
  • வனத் துறையினா் கடந்த சில நாள்களுக்கு முன்பு கரடியை பிடிப்பதற்காக உயிலட்டி கிராமத்தின் சாலையோரம் கூண்டு வைத்தனர்.

அரவேணு:

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி நகர், அரவேணு, ஜக்கனாரை, ஆடந்தொரை சாலை, மிளிதேன், உயிலட்டி பகுதிகளில் கடந்த சில தினங்களாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

உயிலட்டி, குன்னியட்டி பகுதிகளில் 3 கரடிகள் சுற்றி திரிந்து மக்களை அச்சுறுத்தி வந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனேயே வசித்து வருகின்றனர்.மேலும் அந்த பகுதியில் உள்ள வீடுகளின் கதவை உடைத்தது. விவசாய நிலங்களில் பயிரிட்டிருந்த பயிர்களையும் சேதப்படுத்தியது.

இதனால் கரடியை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடா்ந்து, வனத் துறையினா் கடந்த சில நாள்களுக்கு முன்பு கரடியை பிடிப்பதற்காக உயிலட்டி கிராமத்தின் சாலையோரம் கூண்டு வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை வனத்துறையினர் வைத்த கூண்டில், 3 கரடிகளில் 2 கரடிகள் சிக்கி கொண்டது. மற்றொரு கரடி தப்பியோடி விட்டது.பிடிபட்ட 2 கரடிகளையும் வாகனத்தில் ஏற்றி முதுமலை புலிகள் காப்பகத்துக்கு எடுத்து சென்று துணை இயக்குநா், வனக் கால்நடை மருத்துவா், வனச் சரக அலுவலா் முன்னிலையில் அடா்ந்த வனப் பகுதிக்குள் விடப்பட்டன.

தொடர்ந்து இந்த பகுதியில், சுற்றி திரியும் மற்றொரு கரடியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.மேலும் அந்த கரடியையும் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனத்திற்குள் விடுவதற்கான நடவடிக்கையை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News