உள்ளூர் செய்திகள்
களக்காடு மலையில் பற்றி எரிந்த காட்டுத்தீ கட்டுக்குள் வந்தது
- கருங்கல்கசம் பீட் ஆனை கல் பொடவு வனப்பகுதியில் நேற்று மாலை திடீர் என காட்டுத் தீ விபத்து ஏற்பட்டது.
- இது குறித்து தகவல் அறிந்ததும் களக்காடு வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் கோடை காலம் முடிந்த பின்னரும் வெயில் கொளுத்தி வருகிறது. மழை பெய்யாததால் அருவி-நீரோடைகள் வறண்டு வருகின்றன. இதனால் வனப்பகுதியில் வறட்சி நிலவுகிறது.
இந்நிலையில் கருங்கல்கசம் பீட் ஆனை கல் பொடவு வனப்பகுதியில் நேற்று மாலை திடீர் என காட்டுத் தீ விபத்து ஏற்பட்டது. மலையில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீ மள, மளவென மற்ற பகுதிகளுக்கும் பரவி பற்றி எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் களக்காடு வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதையடுத்து காட்டுத் தீ கட்டுக்குள் வந்தது.