உள்ளூர் செய்திகள்

20 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லையும் அரசு கொள்முதல் செய்ய வேண்டும்

Published On 2022-09-27 10:05 GMT   |   Update On 2022-09-27 10:05 GMT
  • நெல் மூட்டைகளை உடனுக்குடன் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பாததால் தேங்கியது.
  • குறுவை சாகுபடி நடைப்பெற்றுளதால் நடமாடும் கொள்முதல் நிலையங்களை தொடக்கி அதிகப்படுத்திட வேண்டும்.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொது ச்செயலாளர் சாமி.நடராஜன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டத்தில் ஒரு பகுதி, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு பகுதி ஆகிய டெல்டா மாவட்டங்களில் குறுவை அறுவடை வேகமாக நடைப்பெற்று வருகிறது.

மேட்டூர் அணையில் இந்தாண்டு முன்கூட்டியே நீர் திறக்கப்பட்டதால் அரசு நிர்ணயித்த இலக்கையும் தாண்டி குறுவை சாகுபடி பரப்பளவு அதிகமாக செய்யப்பட்டுள்ளது.

ஆனால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை போதுமான அளவு திறக்கப்படவில்லை.

திறக்கப்பட்டநிலைய ங்களிலும் விவசாயிக ளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனுக்குடன் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்படாததால் நெல்மூட்டைகள் ஒவ்வொரு மையங்களிலும் தேங்கிக்கிடக்கிறது.

எனவே விவசாயிகள் கோரக்கூடிய இடங்களில் நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்.

கூடுதல் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைப்பெ ற்றுளதால் நடமாடும் கொள்முதல் நிலையங்களை துவக்கி அதிகப்படுத்திட வேண்டும்.

தற்போது விவசாயிகளிடம் உள்ள முக்கிய பிரச்சனையான 17 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வது என்பது ஏற்புடையதல்ல மழைக்காலம் என்பதால் தமிழக அரசு மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்று 20 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது சங்கத்தின் மாநிலதுணை செயலாளரும், மயிலாடுதுறை மாவட்ட செயலா ளருமான துரைராஜ், மாநிலக்குழு உறுப்பினர்கள் சிம்சன், குணசுந்தரி, மாவட்ட பொருளாளர் செல்லப்பா ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News