திருமண விழாவில் பாட்டு பாடி மணமக்களை வாழ்த்திய இன்ஸ்பெக்டர்
- நூறு வருசம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் என்னும் பாடலை பாடினார்.
- கரகோசம் எழுப்பி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தனியார் திருமண மண்டபத்தில் பேராவூரணி கோகனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் சார்பில் மூன்று ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது.
விழாவிற்கு சங்கதலைவர் பாண்டியராஜன் தலைமை வகித்தார்.
மாவட்ட அவை இணைப்பொருளாளர் சாய்செந்தில், மண்டல ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், மாவட்டத் தலைவர் நீலகண்டன், மாவட்டத் தலைவர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
3 ஜோடிகளுக்கு திருமணத்தை மாவட்ட ஆளுனர் டாக்டர் சேது சுப்பிரமணியன், தாசில்தார் சுகுமார், இன்ஸ்பெக்டர் செல்வி ஆகியோர் நடத்தி வைத்தனர்.
லயன்ஸ் சங்கத்தினர் அனைவரும் சீர்வரிசை எடுத்து வந்தனர்.
பேராவூரணி இன்ஸ்பெக்டர் செல்வி மண மக்களை வாழ்த்தி நூறு வருசம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் தான் என்னும் திரைப்பட பாடல் பாடியது அனைவரையும் கவர்ந்தது.
கரகோசம் எழுப்பி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் தலைவர் பாண்டியராஜன், செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் சங்கர்ஜவான் மற்றும் பலர் வரவேற்றனர்.