தூத்துக்குடியில் வடமாநில தொழிலாளர்களின் வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு
- தொழிலாளர்கள் வேலைக்கு சென்ற பின் அவர்கள் தங்கி இருந்த வீட்டின் கதவு பூட்டு, ஜன்னல்கள், மோட்டார் ரூம் ஆகியவைகள் உடைத்து பணம் உள்ளிட்டவற்றை திருடி சென்றனர்.
- முத்தையாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி சண்முகம் புரம் அருகே எஸ்.பி.ஜி.கோவில் தெருவை சேர்ந்தவர் ராமஜெயம் (வயது71). இவர் முத்தையா புரம் சுபாஷ்நகரில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டு ள்ளார்.அதில் 3 வீடுகளில் வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி இருந்து தனியார் தொழில் நிறுவனங்களில் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று தொழிலாளர்கள் வேலைக்கு சென்ற பின் அவர்கள் தங்கி இருந்த வீட்டின் கதவு பூட்டு, ஜன்னல்கள், மோட்டார் ரூம் ஆகியவைகள் உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் 10 வடமாநில தொழி லாளர்கள் வைத்தி ருந்த 10 செல்போன்கள், காமிரா, டி.வி.ஆர்.பாக்ஸ், ரூ. 9 ஆயிரம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய துணிகள் ஆகியவற்றை திருடி சென்றனர். இது குறித்து முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.