உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் அம்மா உணவகத்தில் நகரசபை தலைவி ஆய்வு

Published On 2022-06-12 08:39 GMT   |   Update On 2022-06-12 08:39 GMT
  • 5 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
  • உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

 ஊட்டி:

ஊட்டி நகரில் அரசு தலைமை மருத்துவமனை, மத்திய பஸ் நிலையம் ஆகிய இடங்கள் உள்பட மாவட்டத்தில் மொத்தம் 5 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

காலையில் இட்லி, சாம்பார், மதியம் தயிர் சாப்பாடு, எலுமிச்சை சாப்பாடு, கலவை சோறு ஆகியவை வழங்கப்படுகின்றன. ரூ.1 முதல் 5 ரூபாய் வரை‌யில் உணவுகள் கிடைப்பதால் ஏழை உழைப்பாளர்கள் மற்றும் நகரங்களில் வறிய நிலையில் உள்ள மக்கள் உணவருந்திச் செல்கின்றனர்.

இந்த நிலையில் உதகை மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள அம்மா உணவகத்தில் நகரசபை தலைவி வாணீஸ்வரி, ஆணையாளர் காந்தி ராஜ் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்ஆகொண்டனர். வருகை பதிவேடுகள், தினசரி குறிப்புகள் மற்றும் தயாரிக்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

எனது குப்பை எனது பொறுப்பு ஊட்டி நகராட்சி மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நகரசபை தலைவி வாணீஸ்வரி, ஆணையாளர் காந்திராஜ் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைததனர். தொடர்ந்து தூய்மை பணிகள் நடந்தன.

Tags:    

Similar News