விடுபட்ட தார்சாலை வேகத்தடைக்கு வெள்ளை வர்ணம் பூச வேண்டும்
- தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
- கலவை தயாரிக்கும் போதே அதே வெள்ளை நிறம் கலந்து தயாரிக்கலாம்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புதிதாக தார்சா லைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்னும் பல இடங்களில் தார்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. தார்சாலையில் விபத்தை தடுக்கும் வகையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால் சில இடங்களில் அந்த வேகத்தடைக்கு வெள்ளை வர்ணம் பூசாமல் உள்ளது.
இதனால் வாகன ஓட்டிகளுக்கு அருகே வந்த பிறகு தான் வேகத்தடை இருப்பது தெரிகிறது.
இதன் காரணமாக சிலர் தடுமாற்றத்துடன் விழுகின்றனர்.
குறிப்பாக இரவு நேரங்களில் விபத்து நடக்கிறது.
எனவே சாலையில் வேகத்தடை அமைக்கும் போதே வெள்ளை வர்ணம் பூச வேண்டும்.
இல்லையென்றால் வேகத் தடுப்பில் அடிக்கும் வெள்ளை நிறத்திற்குப் பதில் வேகத்தடுப்பு கலவை தயாரிக்கும் போதே அதே வெள்ளை நிறம் கலந்து தயாரிக்கலாம் என்று வாகன வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் எங்கெல்லாம் வேகத்தடைக்கு வர்ணம பூசாமல் உள்ளது என கண்டறிந்து அதறகு வெள்ளை வர்ணம் பூச வேண்டும்.
தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.