காரைக்காலில் சீட்டு நடத்தி நஷ்டம் அடைந்த முதியவர் மாயம்
- சீட்டு கட்டியவர்கள் இவரது வீட்டுக்கு சென்று பணம் கேட்டு வந்துள்ளனர்.
- நான் வீட்டை விட்டு வெளியேறுகிறேன் என கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமாகி விட்டார்.
புதுச்சேரி:
காரைக்கால் தருமபுரம் மடவிளாகம் பகுதியைச்சேர்ந்த வர் முத்துசாமி (வயது60). அரிசி கடை நடத்தி வந்தார். இந்நிலை யில், முத்துசாமி சீட்டு நடத்தி வந்தார். அதில் பலர் பணம் கட்டாமல் இவரை ஏமாற்றிவிட்டதாக கூறப்படு கிறது. இதனால் மற்ற சிலருக்கு பணம் தரமுடியாமல் முத்துசாமி அவதியுற்று வந்துள்ளார். சீட்டு கட்டியவர்கள் இவரது வீட்டுக்கு சென்று பணம் கேட்டு வந்துள்ளனர். இதனால் விரக்தியில் இருந்து வந்த முத்துசாமி, கடந்த 20-ந் தேதி, தான் சீட்டு நடத்தியதில் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. பலர் தனக்கு தரவேண்டிய பணத்தை தராமல் ஏமாற்றிவிட்டனர்.
நானும் பலருக்கு பணம் தரமுடியாமல் மிகுந்த மனவேதனையில் உள்ளேன். பலர் என்னை நேரிலும், போனிலும் பணம் கேட்டு தொந்தரவு செய்வதால், நான் வீட்டை விட்டு வெளியேறுகிறேன் என கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமாகிவிட்டார். இது குறித்து முத்துசாமிய்ன் அண்ணன் தட்சிணாமூர்த்தி, காரைக்கால் நகர போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான முத்துசாமியை தேடிவருன்றனர். அதேபோல், காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் வேலை செய்யும், காரைக்கால் கோட்டுச்சேரியைச் சேர்ந்த ராஜவேல் (56) என்பவர், கடந்த 19-ந் தேதி காலை ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறி சென்றவர் இதுநாள்வரை வீடு திரும்பவில்லையென கூறப்படுகிறது. இது குறித்து அவரது மகள் நந்தினி காரைக்கால் நகர போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர்.