உள்ளூர் செய்திகள்

திருவாரூரில் கூட்டுறவு ஊழியர் சங்க கூட்டம் நடந்தது.

தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தை ஒரே துறையின்கீழ் கொண்டு வரவேண்டும்

Published On 2022-06-28 08:22 GMT   |   Update On 2022-06-28 08:22 GMT
  • பொது விநியோக திட்டத்திற்காக வழங்கப்படும் குடும்ப அட்டைகளை வகைப்படுத்தி சீரமைத்து தர வேண்டும்.
  • அரசு ஊழியர்களுக்கு இணையான வகையில் கூட்டுறவு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

திருவாரூர்:

திருவாரூரில் கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சி.ஐ.டி.யு மாவட்டத் தலைவர் முருகையன் தலைமை வகித்தார். கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில தலைவர் சௌந்தரராஜன் தொடக்க உரையாற்றினார். தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி நிறைவு உரையாற்றினார்.

கூட்டத்தில் தமிழகத்தில் பொது வினியோகத் திட்டம் கூட்டுறவு துறை மற்றும் உணவு மற்றும் நுகர்வோர் பொருள் வழங்கு துறை ஆகிய இரண்டு துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் நிர்வாக குளறுபடிகள் ஏற்படுவதால் பொது விநியோகத் திட்டத்தை ஒரே துறையின் கீழ் கொண்டு வரவேண்டும். பொது விநியோகத் திட்டத்திற்காக வழங்கப்படும் குடும்ப அட்டைகளை வகைப்படுத்தி சீரமைத்து தர வேண்டும்.

பொருள்களின் எடை குறைகளை தவிர்க்கும் வகையில் பொது விநியோகத் திட்டத்திற்கு வழங்கப்படும் அனைத்து பொருட்களும் உறைகளில் அடைத்து தரவேண்டும். பொதுவிநியோகத் திட்ட ஊழியர்களுக்கு முழு ஊதிய நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு தேர்வுநிலை, சிறப்புநிலை வழங்குவதில் உள்ள சிக்க ல்களை நீக்கிட வேண்டும். கூட்டுறவு நிறுவன ங்களில் பணியாற்றும் ஊழிய ர்களுக்கு கருணை ஓய்வூதிய திட்டத்தை உருவாக்கி செயல்படுத்திட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணையான வகையில் கூட்டுறவு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.கூட்டுறவு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி பராமரிக்கும் முறையினை வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் மூலம் செயல்படுத்திட வேண்டும்.

இவைகள் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில இணை செயலாளர் சித்ரா, சிஐடியு மாவட்டத் தலைவர் மாலதி, மாவட்டப் பொருளாளர் வைத்தியநாதன், கூட்டுறவு ஊழியர் சங்க செயலாளர் சாந்தகுமாரி, கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் முருகானந்தம், மாவட்டப் பொருளாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக வரவேற்புக் குழுத் தலைவர் விஜயன் வரவேற்றார். இறுதியில் மாநில குழு உறுப்பினர் செல்வம் நன்றி கூறினார்.

Tags:    

Similar News