பெண்ணை தங்களுடன் அனுப்ப கூறி உறவினர்கள் போராட்டம்
- யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி காதலர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
- புகார் அளிக்கப்பட்ட நிலையில் காதல் ஜோடிகள் காவல்நிலையம் வந்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் செல்போன் கடை வைத்திருக்கும் ரிக்கப் சந்த், இவரது மகள் (வயது 19).
இவருக்கும் மயிலாடுது றையைச் சார்ந்த தற்போது காரைக்காலில் வசித்து வரும் பாலச்சந்தர் 20 என்ற வாலிபருக்கும் சில ஆண்டு களாக காதல் ஏற்பட்டது.
காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரிந்ததால் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி காதலர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
இதுகுறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் காதல் ஜோடிகள் காவல்நிலையம் வந்தனர்.
தாங்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்த அந்தப் பெண் தனது கணவரோடு தான் செல்வேன் என்றும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பெண்ணை தங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும் என்று பெண்ணின் உறவினர்கள் காவல்து றையினரிடம் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் காவல்து றையினர் மறுத்து விட்டனர்.
பின்னர் பெண்ணை காதல் திருமணம் செய்த கணவனுடன் போலீசார் பெண்ணை அனுப்பி வைத்தனர்.
ஆத்திரமடைந்த உறவினர்கள் மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகே மயிலாடுதுறை கும்பகோணம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போலிஸ்சார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 34 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.