உள்ளூர் செய்திகள்

அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.

சீர்காழியில் நடைபெற இருந்த மறியல் போராட்டம் ரத்து

Published On 2023-09-15 10:11 GMT   |   Update On 2023-09-15 10:11 GMT
  • சீர்காழி நகர் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் நகராட்சி சார்பில் கொட்டப்பட்டு வருகிறது.
  • அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும் மறியல் போராட்டம்.

சீர்காழி:

சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட பிச்சைக்காரன்விடுதியில் கடந்த சில மாதங்களாக சீர்காழி நகர் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை நகராட்சி சார்பில் கொட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் 4-வதுவார்டில் தெருவிளக்கு, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரியும் சாலைமறியல் போராட்டம் அறிவித்தனர்.

இதனையடுத்து சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதிபேச்சுவார்த்தை நடைபெற்றது.

வட்டாச்சியர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், இன்ஸ்பெக்டர் சிவக்குமார், நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகர சபை தலைவர் துர்கா ராஜசேகரன்,போராட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயரெங்கன், தனியார் ஒப்பந்ததாரர் தனராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நித்தியவனம், பிச்சைக்காரன் விடுதி, தோட்ட மானியம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நித்தியவனம், பிச்சைக்காரன் விடுதி, தோட்ட மானியம் ஆகிய பகுதிகளில் உடனடியாக பொது குடிநீர் இணைப்பகூடுதலாக அமைத்து தருவது.

தேவைப்படும் இடங்களில் கூடுதலாக தெருவிளக்கு வசதிஏற்படுத்தி தருவது.

அடுத்த மாதம் அக்டோபர் 31ம் தேதி வரை பிச்சைக்காரன் விடுதியில் தற்காலிகமாக குப்பைகளை கொட்டி தரம் பிரிப்பது. அதற்குள் குப்பை கொட்டுவதற்கு நிரந்தர இடத்தினை தேர்வு செய்வது.

கோவில் இடங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டு வரி ரசீது கிடைக்க அரசு சார்பில் பரிசீலனை செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் நகராட்சி பணி மேற்பார்வையாளர் விஜயேந்திரன், வருவாய் ஆய்வாளர் சுகன்யா, கவுன்சிலர்கள் பாஸ்கரன், வேல்முருகன், ராமு, கஸ்தூரிபாய் செந்தில்குமார், ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News