உள்ளூர் செய்திகள்

மலையில் பற்றி எரியும் தீயை படத்தில் காணலாம்.

கடையநல்லூர் அருகே காட்டு தீயை அணைக்கும் பணி 2-வது நாளாக தீவிரம்

Published On 2022-06-06 08:12 GMT   |   Update On 2022-06-06 08:12 GMT
  • சொக்கம்பட்டி பீட் மலையில் திடீரனெ காட்டுத் தீ ஏற்பட்டது
  • இலை சருகுகளில் பரவிய காட்டுத்தீ பயங்கரமாக பற்றி எரிய தொடங்கியது

கடையநல்லூர்:

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி கடையநல்லூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட சொக்கம்பட்டி பீட் மலையில் திடீரனெ காட்டுத் தீ ஏற்பட்டு பற்றி எரிகிறது.

நேற்று காலை புளியங்குடி வனச்சரகம் டி.என். புதுக்குடி பீட்டில் பற்றி எரிந்த இந்த காட்டுத்தீ காற்றின் வேகத்தால் மாலைநேரத்தில் கடையநல்லூர் வனச்சரகம் சொக்கம்பட்டி பீட் மேற்கு தொடர்ச்சி மலைக்கு பரவியது. கோடை வெயிலால் இலையுதிர் காலத்தில் காய்ந்து கருகி கிடந்த இலை சருகுகளில் பரவிய காட்டுத்தீ பயங்கர மாக பற்றி எரிய தொடங்கியது.

கடையநல்லூர் ரேஞ்சர் சுரேஷ் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள், பொதுமக்களின் உதவியுடன் செடி,கொடிகளை வைத்து தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

எனினும் இரவு நேரமாகி விட்டதால் அதில் தொய்வு ஏற்பட்டது. இன்றும் 2-வது நாளாக அதிகாலை முதலே தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News