ஜெயிலில் இருந்து வந்த 10-வது நாளில் வாலிபருக்கு கத்திக்குத்து
- வாலிபர் மீது கஞ்சா மற்றும் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது
- போலீசார் வழக்குப்பதிவு செய்து கத்தியால் குத்திய ஸ்ரீகாந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குனியமுத்தூர்,
கோவை போத்தனூர் அருகே உள்ள ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் தமிழ் அரசு (வயது 24). இவர் மீது கஞ்சா மற்றம் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்தநிலையில் ஒரு வழக்கில் கைதான தமிழ் அரசு கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் ஜெயிலில் இருந்த வெளியே வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த் (20) என்வருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.
சம்பவத்தன்று தமிழ் அரசு தனது தம்பியுடன் ஸ்ரீகாந்தை கொலை செய்வதற்காக அந்த பகுதியில் உள்ள காலி இடத்துக்கு சென்றார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஸ்ரீகாந்த் அவர் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து தமிழ் அரசின் வயிறு மற்றும் இடுப்பில் குத்தினார். இதனை தடுக்க சென்ற அவரது தம்பிக்கும் கையில் கத்திக்குத்து ஏற்பட்டது.
அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் ஸ்ரீகாந்த் அங்கு இருந்து தப்பிச் சென்றார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய தமிழ் அரசை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்தியில் சேர்த்தனர். இது குறித்து சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதத்தில் தமிழ் அரசை கத்தியால் குத்திய ஸ்ரீ காந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.