சேலம் அருகே பேக்கரி கேசியர் கொலை கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
- தர்மபுரி மாவட்டம் அரூர். இவர் அதிகாரி பட்டியல் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் தங்கி சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள பேக்கரியில் கேசியராக பணி புரிந்தார்.
- மனைவியுடன் கள்ளக்காதல் இருக்குமோ என்று சந்தே கத்தேன் இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் லோகேஸ்வ ரனை கல்லால் தலையில் தாக்கினேன். இதில் அவர் இறந்து விட்டார் என்று கூறியுள்ளார்.
சேலம்:
சேலம் உடையாப்பட்டி அருகே உள்ள அதிகாரி பட்டியை சேர்ந்தவர் மணி வண்ணன். இவரது மகன் லோகேஸ்வரன் (வயது 25). இவரது சொந்த ஊர் தர்மபுரி மாவட்டம் அரூர். இவர் அதிகாரி பட்டியல் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் தங்கி சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள பேக்கரியில் கேசியராக பணி புரிந்தார்.
இந்த நிலையில் அதி காரியப்பட்டியை சேர்ந்த மணிகண்டன் மனைவி வசுமதி(25) என்பவருடன் லோகேஸ்வரன் அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படு கிறது. இதனால் அவர்க ளுக்குள் கள்ளக்காதல் இருப்பதாக மணிகண்ட னுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு வீட்டின் முன் நண்பருடன் லோகேஸ்வரன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மணிகண்டன் லோகேஸ்வர னின் பின் தலையில் தாக்கி னார். இதில் படுகாயம் அடைந்த லோகேஸ்வரனை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் வழியிலேயே லோகேஸ்வரன் பரிதாப மாக இறந்தார். தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் சம்பவத்திற்கு விரைந்து சென்று விசாரித்த னர். பின்னர் மணிகண்ட னையும் பிடித்து விசாரித்த னர். விசாரணையில் அவர் தனது மனைவியுடன் லோகேஸ்வரன் அடிக்கடி பேசி வந்ததாக அந்த பகுதி யினர் கூறியதால் தனது மனைவியுடன் கள்ளக்காதல் இருக்குமோ என்று சந்தே கத்தேன் இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் லோகேஸ்வ ரனை கல்லால் தலையில் தாக்கினேன். இதில் அவர் இறந்து விட்டார் என்று கூறியுள்ளார்.
இதை அடுத்து போலீசார் மணிகண்டனை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்கு இடையே லோகேஸ்வரன் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்கு பின் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதனால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.