தமிழர்கள் உருவாக்கிய பீபா கால் பந்து போட்டிக்கான தீம்-பாடல்
- பாடல்களுக்கும் கிடைக்காத சிறப்பு நம் தமிழர்கள் உருவாக்கிய இந்த பாடலுக்கு கிடைத்திருப்பது கத்தார் வாழ் தமிழர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.
- தீம் பாடல் மட்டுமில்லாமல் கத்தாரில் வசிக்கும் பல்வேறு நாட்டை சேர்ந்த ரசிகர்களும் தங்கள் சார்பாக தீம் பாடல்களை வெளியிட்டனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த சம்சூதீன்சாதிக்பாஷா தலைமையில் சாம்ஜோசப் பாடலை எழுதி இசை அமைத்து உலக அளவில் நல் வரவேற்பை பெற்றுள்ளது. மத்திய கிழக்கு நாடான கத்தார் உலகளாவிய கால் பந்து போட்டியை மிக நேர்த்தியாகவும் அனைவரும் பிரமிக்கும் அளவிலும் நடத்திக்கொண்டு வருகிறது.
உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள் கத்தார் தோகாவை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.கத்தாரில் அனைத்து நாட்டின் மக்களும் வசித்துவரிக்கின்றனர், பெரும்பான்மையாக தமிழர்களும், மலையா ளிகளும் உள்ளனர். அவர்கள் கால்பந்து போட்டியை மிக விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.
கால்பந்து போட்டிக்கான பீபா அங்கீகரிக்கப்பட்ட தீம் பாடல் மட்டுமில்லாமல் கத்தாரில் வசிக்கும் பல்வேறு நாட்டை சேர்ந்த ரசிகர்களும் தங்கள் சார்பாக தீம் பாடல்களை வெளியிட்டனர்.
கத்தார்-உலக கால் பந்து போட்டி க்காக கத்தார் தமிழர்கள் கலாச்சார பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குன் ஷாகிரான் என்ற ஆங்கில தீம் பாடலை கத்தார் அரசு ஆதரித்து இசைவெளிட்டு விழா நடைபெற்றது.
அனைத்து நாட்டை சேர்ந்தவர்களும் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது. அனைத்து பாடல்களுக்கும் கிடைக்காத சிறப்பு நம் தமிழர்கள் உருவாக்கிய இந்த பாடலுக்கு கிடைத்திருப்பது கத்தார் வாழ் தமிழர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தப்பாடலை தமிழ் மகன் அவார்ட்ஸ்-ன் நிறுவனர் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை சேர்ந்த சாதிக் பாட்ஷா இயக்கி உள்ளார். சாம் ஜோசப் இசை அமைக்க, பாடகர்.ஆனந்த் அரவிந்தாக்சன் பாடலுக்கு உயிரோட்டம் கொடுத்துள்ளார்.
தமிழர்கள் உருவாக்கிய குன் ஷாகிரான் பாடலை அங்கீகரிக்கும் விதமாக கத்தார் மீடியா கார்பரேஷன் கத்தார் நாட்டின் பெருமைக்குரிய தேசிய கத்தார் தொலைக்காட்சி மற்றும் பிரெஞ்சு, ஆங்கில, ஸ்பானிஷ் மற்றும் உருது மொழி வானொலிகளிலும் ஒளிபரப்பி வருவது தமிழர்களை பெருமை படுத்தும் விதமாக அமைந்துள்ளது.