ஆணவ படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
- படுகொலை சம்பவத்தில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 50 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும்.
- பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த அருணபதி கிராமத்தில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்த மகன் சுபாஷ் மற்றும் கொலையை தடுக்க முயன்ற சுபாஷின் பாட்டி கண்ணம்மாவைவும் வெட்டி ஆணவக் கொலை செய்த கொலையாளி தண்டபாணிக்கு பிணையில் விடாமல் குண்டர் தடுப்பு சட்டத்தை அமுல்படுத்தி கடுமையான தண்டனையை உடனடியாக வழங்க வேண்டும்.
இந்த படுகொலை சம்பவத்தில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 50 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும்.
இது போன்ற ஆணவக் கொலைகளை உடனடியாக விசாரிப்பதற்காக தனி நீதிமன்றத்தை தமிழக அரசு நிறுவ வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விசிக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட.ன ஆர்ப்பாட்டம் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு விசிக கட்சியின் மாநில துணைச் செயலாளர் அசோகன் தலைமையில் 20 -க்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.