உள்ளூர் செய்திகள்

மரங்களுக்கு தண்ணீர் ஊற்றும் பணி தீவிரம்

Published On 2023-03-25 10:13 GMT   |   Update On 2023-03-25 10:13 GMT
  • மனம் வீசி கொண்டிருந்த வண்ண வண்ண அலங்கார செடிகளும், மலர்களும் வெயிலின் தாக்கத்தால் வாடி வதங்கத் தொடங்கின.
  • தொப்பூர் முதல் கிருஷ்ணகிரி வரை சாலையின் இரு புறங்களிலும் உள்ள மரங்களுக்கு தண்ணீர் ஊற்றி வருகின்றனர்.

தொப்பூர்,  

தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டு மாதங்களாக வெயில் வாட்டி எடுத்து வருகிறது. கோடைக்கு முன்பே அனல் பறந்த வெப்பத்தால் வனப்பகுதி களில் உள்ள செடிகள் முதல் தேசிய நெடுஞ்சாலையில் ஓரங்களில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகள் மற்றும் சாலையின் சென்டர் மீடியினில் வைக்கப் பட்டுள்ள அலங்கார பூச்செடிகள் வரை அனைத்தும் தண்ணீர் இன்றி வாட தொடங்கின.

இதனையடுத்து தொப்பூர் முதல் கிருஷ்ணகிரி வரை உள்ள சேலம், பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் இரு புறங்களிலும் அதிக அளவில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பரா மரிக்கப்பட்டு வருகின்றன.

அதேபோல் சாலையின் சென்டர் மீடியனிலும் பல வகையான அலங்கார பூச்செடிகள் நடப்பட்டு தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் கடுமையான கோடை வெப்பம் முன்பே தொடங்கியதன் காரணமாக பூக்களோடு மலர்ந்து மனம் வீசி கொண்டிருந்த வண்ண வண்ண அலங்கார செடிகளும், மலர்களும் வெயிலின் தாக்கத்தால் வாடி வதங்கத் தொடங்கின.

பசுமையாக பாதுகாக்கப் பட்டு வளர்க்கப்பட்ட செடிகள் தொடர்ந்து வாடுவதால் அவற்றை காப்பாற்றும் பொருட்டு சாலை பராமரிப்பு நிறுவனத் தினர் தினந்தோறும் தொப்பூர் முதல் கிருஷ்ணகிரி வரை சாலையின் இரு புறங்களிலும் உள்ள மரங்களுக்கு தண்ணீர் ஊற்றி வருகின்றனர்.

மேலும் சாலையின் நடுவே சென்டர் மீடியனில் வைக்கப்பட்டுள்ள பூச்செடிகள் உள்ளிட்ட அனைத்திற்கும் லாரிகள் மூலம் தண்ணீர் ஊற்றி அனல் பறக்கும் வெப்பத்திலிருந்து செடிகளையும் மரக்கன்று களையும் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Similar News