வத்தலக்குண்டு: குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்
- தமிழ்நா ட்டில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களு க்கும் விடுமுறை வழங்க வேண்டும்,
- 10 ஆண்டுகள் பணி செய்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்,
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு ஒன்றிய பகுதியிலுள்ள அங்கன்வாடி பணியாளர்கள், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்கம் சார்பில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவல கத்தை முற்றுகையிட்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் ஜானகி தலைமை தாங்கினார். வத்தலகுண்டு வட்டாரத் தலைவர் நிறைமதி, வட்டாரச் செயலாளர் சக்திராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு மாவட்டச் செயலாளர் பிரபாகரன், ஒன்றிய அமைப்பாளர் வின்சென்ட் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
தற்போது குழந்தை களுக்கு காய்ச்சல் பரவி வரும் சூழலில் 2 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளின் நலன் கருதியும்,குழந்தைகள் நல மைய பணியாளர்களின் நலன் கருதியும் கடும் கோடை வெயிலின் தாக்க த்திலிருந்து பாது காத்துக் கொள்ள பள்ளி,கல்லூரி களுக்கு கோடை விடுமுறை விடுவது போல் தமிழ்நா ட்டில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களு க்கும் விடுமுறை வழங்க வேண்டும்,
10 ஆண்டுகள் பணி செய்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை முழுமை யாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறு த்தி ஆர்ப்பாட்டம் நடைபெ ற்றது. ஆர்ப்பாட்ட த்தில் சுமார் 200 க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.