உவரி அருகே மண்எண்ணை கடத்திய வாலிபர் கைது-கார் பறிமுதல்
- உவரி மற்றும் கடலோர பகுதிகளில் மண்எண்ணை அடிக்கடி கடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தது.
- உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையிலான போலீசார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
திசையன்விளை:
உவரி மற்றும் கடலோர பகுதிகளில் மண்எண்ணை அடிக்கடி கடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தது.
இதையடுத்து உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையிலான போலீசார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இரவில் உவரி அருகே உள்ள ஆனைகுடி விலக்கு பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி டிரைவரிடம் விசாரித்தனர்.
அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டம் நடுவக்குறிச்சி மெயின்ரோடு பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவரது மகன் தாமோதரன் (வயது 32) என்பது தெரியவந்தது.
ஆனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர் ஓட்டிவந்த காரை சோதனை செய்தனர். அப்போது அதில் 5 கேன்களில் 275 லிட்டர் மண்எண்ணையை பதுக்கி வைத்து கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து காருடன் மண்எண்ணையை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தாமோதரனையும் கைது செய்தனர்.