உள்ளூர் செய்திகள் (District)

மந்தாரக்குப்பம் அருகே மணமகள் அறையில் வைக்கப்பட்ட 10 பவுன் நகை- பணம் திருட்டு

Published On 2023-11-19 07:13 GMT   |   Update On 2023-11-19 07:13 GMT
  • உமாபதி மகள் திருமணம் கங்கைகொண்டான் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
  • இதனை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

கடலூர்:

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர் உமாபதி (வயது 60). இவரது மகள் திருமணம் கங்கைகொண்டான் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது திருமணத்திற்காக 10 பவுன் நகை மற்றும் 12 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை திருமண மண்டபத்தில் வைத்து விட்டு நெய்வேலி வேலுடையான்பட்டு கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றனர்.

பின்னர் சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் திருமண மண்டபத்திற்கு வந்து மணமகள் அறைக்கு சென்று பார்த்தபோது 10 பவுன் தங்க நகை மற்றும் 12 ஆயிரம் பணத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உமாபதி நகை மற்றும் பணத்தை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதன் மதிப்பு 5 லட்சம் ஆகும். இது குறித்து மந்தாரக்குப்பம் போலீஸ நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News