உள்ளூர் செய்திகள்

தெப்ப வெள்ளோட்டம் நடந்தது.

எட்டுக்குடி சுப்பிரமணியர் கோவிலில் தெப்பம் வெள்ளோட்டம்

Published On 2023-03-15 08:32 GMT   |   Update On 2023-03-15 08:32 GMT
  • 150 மிதவைகள் கொண்டு கட்டமைப்பு பணிகள் முடிக்கப்பட்டது.
  • தெப்ப உற்சவம் நாளை 16-ந் தேதி இரவு நடைபெற உள்ளது.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடை வீடான ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.

இவ்வாலயத்தில் நடைபெற உள்ள தெப்ப உற்சவத்தை யொட்டி 25 அடி நீளமும் 25 அடி அகலத்துடன் பிரம்மாண்டமான முறையில் 150 மிதவைகள் கொண்டு கட்டமைப்பு பணிகள் முடிக்கப்பட்டது.

தொடர்ந்து தெப்பம் அலங்கரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், தெப்ப உற்சவமானது நாளை (மார்ச்.16) இரவு 7 மணி அளவில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

இதனையொட்டி நடை பெற்ற வெள்ளோட்டத்தில் பிரம்மாண்டமாக கட்டமைக்கப்பட்ட தெப்பத்தின் உறுதித் தன்மை குறித்து பொதுப்பணித்துறையினர், வருவாய்த் துறையினர், உள்ளாட்சி பிரதிநிதிகள், இந்து சமய அறநிலை துறை அலுவலர்கள் மற்றும் காவலர்கள் ஆகியோர் தெப்பத்தில் பயணித்து ஆய்வு மேற்கொண்டனர்.

40 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் தெப்ப உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Tags:    

Similar News