கடலூர் முதுநகரில் பரபரப்பு அரசு பஸ்சில் சென்ற மாணவனை சரமாரியாக தாக்கிய கும்பல்
- பள்ளியில் உணவு இடைவெளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் சாப்பாடு கொண்டு செல்லும் போது 9-ம் வகுப்பு மாணவன் மீது எதிர்பாராமல் பட்டுவிட்டது.
- மறுநாள் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் 11 ஆம் வகுப்பு மாணவனை தாக்கியதாக கூறப்படுகிறது.
கடலூர்:
கடலூர் அருகே ஆடுர்குப்பம் சேர்ந்தவர் 15 வயது மாணவன். இவர் கடலூர் அரசு உதவி பெறும் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் பள்ளியில் உணவு இடைவெளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் சாப்பாடு கொண்டு செல்லும் போது 9-ம் வகுப்பு மாணவன் மீது எதிர்பாராமல் பட்டுவிட்டது. இதனால் இரு மாணவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது 11-ம் வகுப்பு படிக்கும் மாணவன் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவனை அடித்ததாக கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து மறுநாள் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் 11 ஆம் வகுப்பு மாணவனை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த முன் விரோத காரணமாக கடலூரில் இருந்து குறிஞ்சிப்பாடிக்கு அரசு பஸ்சில் 9-ம் வகுப்பு மாணவன் செல்லும்போது அடையாளம் தெரியாத 8 நபர்கள் அரசு பஸ்ருசில் இருந்து இறக்கி சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த 9-ம் வகுப்பு மாணவன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து 8 நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.