உள்ளூர் செய்திகள்

கறவை மாடுகள் வழங்கப்பட்ட போது எடுத்தப்படம்.

கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கறவை மாடுகள் வழங்கல்

Published On 2023-11-09 09:05 GMT   |   Update On 2023-11-09 09:05 GMT
  • கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் 17 தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தாட்கோ மூலம் மானியக்கடனில் கறவை மாடுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
  • கல்லிடைக்குறிச்சி கால்நடை மருத்துவமனை அருகில் உள்ள பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் பார்வதி தலைமை தாங்கினார்.

கல்லிடைக்குறிச்சி:

கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் 17 தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தாட்கோ மூலம் மானியக்கடனில் கறவை மாடுகள் வழங்கும் விழா நடைபெற்றது. கல்லிடைக்குறிச்சி கால்நடை மருத்துவமனை அருகில் உள்ள பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் பார்வதி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் இசக்கிப் பாண்டியன், வங்கி மேலாளர்கள் ஜெயராம், சதீஷ்குமார், கால்நடை மருத்துவர்கள் அகன்யா, சிவமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாட்கோ மாவட்ட மேலாளர் செல்வி கறவை மாடுகளை வழங்கி திட்டம் குறித்து விளக்கவுரை உரையாற்றினார். சமூக ஆர்வலர் முருகன் வரவேற்றார்.

தெற்கு கல்லிடைக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் ஆறுமுகலெட்சுமி, தமிழ்நாடு கிராமவங்கி முன்னாள் மேலாளர் அசரப், தி.மு.க. சேரன்மகாதேவி மேற்கு ஒன்றிய துணைச்செயலாளர் சொரிமுத்து, கவுன்சிலர்கள் பாண்டி, செய்யது அலிபாத்து, கைக்கொண்டான் பொன்னுசாமி, சந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். ரமேஷ் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கறவை மாடுகளை பெறும் பயனாளிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News