உள்ளூர் செய்திகள்

கோவையில் வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி

Published On 2022-12-25 09:16 GMT   |   Update On 2022-12-25 09:16 GMT
  • அசரப் அலி உக்கடம் - பேரூர் பைபாஸ் ரோட்டில் நடந்து சென்றார்.
  • கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்தார்.

கோவை,

கோவை கரும்பு கடையை சேர்ந்தவர் அசரப் அலி (வயது 26). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் உக்கடம் - பேரூர் பைபாஸ் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென அசரப் அலியை தடுத்து நிறுத்தினார்.

பின்னர் அவரிடம் பணம் கேட்டார். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்றார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்தார்.

இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி சென்றார். பின்னர் இதுகுறித்து அசரப் அலி பெரியகடை வீதி போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அசரப் அலியிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுப்பட்டது கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சிவா (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிவாவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News