உள்ளூர் செய்திகள்

குண்டர் சட்டத்தில் கைதான பாலமுருகன், கோகுல்நாத், ஜாபர் அலி, கார்த்திக்.

திருடர்கள்- லாட்டரி சீட்டு வியாபாரி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

Published On 2022-07-27 09:23 GMT   |   Update On 2022-07-27 09:23 GMT
  • சேலத்தை கலக்கிய பிரபல வழிப்பறி திருடர்கள்- லாட்டரி சீட்டு வியாபாரி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
  • மேற்கண்ட 4 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க ஆணை பிறப்பித்தார்.

சேலம்:

சேலம் கன்னங்குறிச்சி ெபரியகொல்லப்பட்டி காமராஜர் காலனியை சேர்ந்தவர் கோகுல்நாத் என்கிற கோகுல் (வயது 29). கடந்த 2021-ம் ஆண்டு கன்னங்குறிச்சி பகுதியில் வைத்து சின்னத்திருப்பதி பாரதிநகரை சேர்ந்த ராஜ மகேந்திரன் மற்றும் சேவிகவுண்டர் தெருவை சேர்ந்த பிரேம்குமார் ஆகியோரிடம் பணம் வழிப்பறி செய்தார். இதேபோல் கடந்த ஏப்ரல் மாதம் பெரியகொல்லப்பட்டியை சேர்ந்த ரகுமான் என்பவரை கட்டையால் தாக்கிய அவர், கொண்டப்ப–நாயக்கன்பட்டியை சேர்ந்த பிரபாகரன் என்பவரை கத்தியை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்தார். இது குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகுல்நாத்தை கைது செய்தனர்.

இதேபோல் சேலம் முள்ளுவாடிகேட் மக்கான் தெருவை சேர்ந்தவர் ஜாபர் அலி (வயது 35). இவர் கடந்த 2020-ம் ஆண்டு சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்து சென்ற ஒரு பெண்ணிடம் இருந்து செல்போன் பறித்து சென்றார். தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 27-ந்தேதி சேலம் புதிய பஸ் நிலையத்தில் ெஜயபால் என்பவரிடம் ரூ.40 ஆயிரம் திருடினார். அதே மாதம் 30-ந்தேதி இட்டேரி சுடுகாடு அருகே நடந்து சென்ற ராஜா என்பவரை ஜாபர் அலி கூட்டாளிகளுடன் சேர்ந்து கத்திமுனையில் பணம் வழிப்பறி செய்தார். இந்த சம்பவம் குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜாபர் அலியை கைது செய்தனர்.

மற்றொரு சம்பவம்: சேலம் கிச்சிப்பாளையம் ஓந்தாபிள்ளைக்காடு 4-வது கிராஸ் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 34). கடந்த 2020-ம் ஆண்டு கார்த்திக் எடப்பாடி க.புதூர் மேற்கு தெருவில் ஒரு வீட்டுக்குள் புகுந்து பிரோவில் இருந்த தங்க தோடு, வெள்ளி கிண்ணம், பணம் ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை திருடினார். தொடர்ந்து அவர், கடந்த ஜூன் மாதம் 15, 16-ந்தேதிகளில் எருமாபாளையம் செல்லக்குட்டிக்காட்டை சேர்ந்த கேசவன் மற்றும் சன்னியாசிகுண்டு அர்ஜுனர் காலனிைய சேர்ந்த பரணி செல்வம் ஆகியோரை வழிமறித்து கத்திமுனையில் பணம், செல்போன், தங்க செயின் ஆகியவற்றை பறித்துச் சென்றார்.இந்த சம்பவம் குறித்து கிச்சிப்பாளையம், அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

அதுபோல் சேலம் அம்மாப்பேட்டை பெரிய கிணத்து தெருவை சேர்ந்தவவர் பாலமுருகன் (வயது 45). கடந்த 2021-ம் ஆண்டு இவர் அம்மாப்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் ஆட்களை வேலைக்கு அமர்த்தி, வெளிமாநில லாட்டரி சீட்டு என்ற பெயரில் வெள்ளை துண்டு சீட்டில் போலியாக நம்பர் எழுதி மோசடியில் ஈடுபட்டார். இது பற்றி தட்டிக்கேட்ட ரங்கநாதன் என்பவரை திட்டி கத்தியால் குத்தினார். இதை தடுக்க வந்த ெபாதுமக்களை பாலமுருகன் கத்தியை காட்டி மிரட்டினார். இது குறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

சேலம் மத்திய ெஜயிலில் அடைக்கப்பட்டுள்ள கோகுல்நாத், ஜாபர் அலி, கார்த்திக், பால முருகன் ஆகிய 4 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோதாவிடம் பரிந்துரை செய்தனர். இதையடுத்து போலீஸ் கமிஷனர், மேற்கண்ட 4 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க ஆணை பிறப்பித்தார். இந்த உத்தரவு ஆணை சேலம் மத்திய சிறையில் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News