உள்ளூர் செய்திகள்

ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற்றது.

திருக்கடையூர், அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம்

Published On 2023-07-22 09:49 GMT   |   Update On 2023-07-22 09:49 GMT
  • ஆடிப்பூர திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • மேளதாளங்கள் முழங்க சிறப்பு அலங்காரத்தில் அபிராமி அம்மன் தேரில் எழுந்தருளினார்.

தரங்கம்பாடி:

திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி உடனுறை அமிர்தகடே ஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நிகழாண்டு ஆடிப்பூர திருவிழா கடந்த 13 ஆம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் வீதி உலா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து 9 ஆம் நாள் நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெற்றது . பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் மேளதாளங்கள் முழங்க வானவேடிக்கையோடு ஸ்ரீஅபிராமி எழுந்த ருளினார்.

இதனையடுத்து மேல வீதியில் இருந்து தேர் புறப்பட்டு வடக்கு வீதி, கீழவதி, தெற்கு வீதி வழியாக வலம் வந்து மீண்டும் மேலவீதியில் நிலையை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இதில் தி.மு.க. செம்பை மத்திய ஒன்றிய செயலாளர் அமுர்த விஜயகுமார், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ், தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் செந்தில், கட்டளை தம்பிரான் சாமிகள், கோவில் கண்காணிப்பாளர் மணி, உள்துறை கண்கா ணிப்பாளர் விருத்தகிரி, கோவில் காசாளர் களியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News